Sunday, March 1, 2009

கணக்கு சரி விடை தப்பு !


வெகு ஆவலாக நான் கடவுள் திரைப்படம் பார்தேன். கணக்கெல்லாம் சரியாகப் போட்டு விட்டு கடைசி வரியில் விடையைத் தப்பாகப் போட்டவிட்ட மாணவனின் விடைத்தாளைப் பார்த்தாற் போல இருந்தது.

பிச்சைக்காரர்களின் பரிதாப உலகத்தை இதை விட அற்புதமாக யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இந்த பரிதாபத்திற்கு சாவுதான் முடிவு என்பது தப்பித்துக்கொள்ளலாக இருக்கிறதே !

இது என் கோணம் என்று பாலா சொல்லலாம் ! அப்படி அவர் சொன்னால் அவரை இயக்குனர் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் சாதாரண மனிதனுக்கே தான் வாழும் சமூகத்தைப் பற்றிய பொறுப்பு இருக்க வேண்டும் . திரைப்பட இயக்குனருக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு வேண்டாமா ?

சொல்லப் போனால் இந்தக் கதைக்கு தப்பான நீதி சொல்லும் ஆர்யா பாத்திரமே வேண்டாம் .

பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை , கொடுமையை ,நிஜம் போலக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பாலாவை ”ஹோ” என்று பாராட்ட வேண்டும். படம் முடிந்து எழுந்து போகும் போது “இந்தக் கொடுமை ஒழிய என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று நினைக்கக் கூடியவன் கூட அவர்களுக்கு சாவு தான் வரம் என்று நினைக்குமாறு முடித்துவிட்ட பாலா மேல் கோபம் தான் வருகிறது .

4 comments:

  1. நல்ல பதிவு. ஆனால் தமிழ் ரசிகர்கள் சோக முடிவுக்குதான் நிறைய ஆதரவு தருவார்க்ள் என்று கூட இருக்கலாம்.

    பாலா எப்போதுமே ஒரு வருத்தத்துடன் கூடிய சோகத்தில்தான் முடிப்பது என்று திருப்பதிக்கு.. ஸாரி.. அகோரிக்கு வேண்டி கொண்டு விட்டார் போலும்.

    ReplyDelete
  2. வழக்கமான படங்களில் இருந்து சற்றே, இல்லை மொத்தமாகவே படம் பண்ணக்கூடியவர்களில் பாலாவும் ஒருவர். அதற்காவது, அவரை பாராட்டுவோமே...

    இங்கேயும் கொஞ்சம் வாங்க... http://valibarsangam.wordpress.com

    ReplyDelete
  3. இது போன்ற படங்கள் சமூக அவலங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுவதோடு சரி.

    ReplyDelete