Friday, February 13, 2009

பிராமண‌ர்களின் மேல் ச‌மூகத்தின் பார்வை


பிராமண‌ர்களின் மேல் ச‌மூகத்தின் பார்வை



சோவின் எங்கே பிராமணன் ஜெயா டிவியின் சமீபத்திய நல்வரவு .இன்றைய தேதியில் பிராமண‌ர்களின் மேல் ச‌மூகத்தின் பார்வை ,கேலி,துவேஷம்,வெறுப்பு இவைகளைப் பற்றியெல்லம் பேசுவதோடு பிராமணர்களின் அறியாமை,அலட்டல்,தவறுகள் இவற்றையும் அலசுகிறது இந்த தொடர்.பல இடங்களில் ,கேள்விகளை எழ வைத்து,அதற்கு சோ அவருக்கே உரிய பாணியில் ,தெளிவாக பதில் அளித்திருப்பது மிகவும் சிறப்பு .
பிராமணர்களே த‌ங்க‌ள் வ‌ழ‌க்குப் பேச்சில் பேச‌ வெட்க‌ப்ப‌ட்டுக் கொண்டு ,எல்லாம் க‌ல‌ந்த‌ ஒரு தங்கிலீஷில்,பேச‌ ஆர‌ம்பித்து விட்ட‌ நேர‌த்தில்‍ ...........
"அந்த‌ந்த‌ ஊர்க்கார‌ர்க‌ள் ,வேறு வேறு த‌மிழில் பேசும் பொழுது,பிராமணர்கள் அவ‌ர்க‌ள‌து த‌மிழில் பேசுவ‌தை ஏன் கேலி செய்கிறீர்க‌ள்" ..........என்னும் அவ‌ர‌து கேள்வி ச‌ர்வ நியாய‌மான‌துதான்.


"உங்கள் பேச்சில் தெரியும் பிராமண பாஷையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்" என்று சிலர்.....அன்பு...(ஆத்திரக் )கட்டளையிட்ட போது என்னுடைய பதில் கூட இப்படித்தான் இருந்தது.நாம் நாமாக இருக்க ஏன் வெட்கப்பட வேண்டும் என்கிற என் தீர்மானம் தான் அதன் காரணம்.
பிராமணர்கள் த‌ங்க‌ளுடைய‌ ப‌ல‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு ,நம்பிக்கைகளுக்கு ச‌ரியான‌ கார‌ண‌ங்க‌ளைத்தெரிந்து வைத்துக் கொள்ளாத‌தும்,ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை கேலி செய்வ‌த‌ற்கு ஒரு காரண‌மாக‌ இருக்கிற‌து.
இந்த‌த் தொட‌ரில் பிராமணர்களின் ப‌ல‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு ,நம்பிக்கைகளுக்கு ச‌ரியான‌ கார‌ண‌ங்க‌ளை விள‌க்க‌ங்க‌ளை சோ கொடுக்க‌ ஆர‌ம்பித்திருப்ப‌து மிக‌வும் வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து.


பிராமணர்கள் த‌ங்க‌ளைத் தாங்க‌ளாக‌ வெளிக்காட்டிக் கொள்ளும் தைரிய‌ம் பெற‌ இந்த‌த் தொட‌ர் வ‌ழி செய்யும் என்ப‌தே என் ந‌ம்பிக்கை ,ஆவ‌ல்.


Monday, February 9, 2009

அலட்டல் இல்லாத கதை





அலட்டல் இல்லாத கதை




பூ படம் பார்த்தேன் ! கடைசி வரை ஆர்வம் கொஞ்சம்கூட குறையாமல் பார்க்க வைத்தது.பாக்ய‌ராஜிற்குப் பிற‌கு நான் அச‌ந்து விய‌ந்த‌ திரைக்க‌தை!
ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கும் போதே தெரிந்து போகிற‌து க‌தாநாய‌கி மாரி ,தான் காத‌லித்த‌ த‌ங்க‌ர‌சுவைக் க‌லியாண‌ம் செய்து கொள்ள‌வில்லை என்று !இருந்தாலும் சுவார‌சிய‌ம் கொஞ்ச‌மும் குறையாம‌ல் பார்க்க‌ வைக்கிற‌து ப‌ட‌ம்.சொல்ல‌ப் போனால் அதிக‌ சுவார‌சிய‌த் துட‌ன் பார்க்க‌ வைக்கிற‌து என்றுதான் சொல்ல‌வேண்டும்.


இர‌ண்டு சினேகிதிக‌ளை ம‌ட்டுமே வைத்துக் கொண்டு
காத‌லை சொல்லியிருக்கும் உத்தியைப் பார‌ட்ட‌ வேண்டும்.பாதி ப‌ட‌ம் வ‌ரைக்கும் த‌ங்க‌ராசு மாரியைக் காத‌லிக்கிறானா என்கிற‌ கேள்வியை ந‌ம் ம‌ன‌தில் ப‌ட‌பட‌க்க‌வைத்திருப்ப‌தும் டைர‌க்ட‌ர் ச‌சியின் வெற்றிதான் !
எல்லோருமே இய‌ல்பாக‌ இருக்கிறார்க‌ள் ! இருக்கிறார்க‌ள் என்றுதான் சொல்ல‌ வேண்டும்,ந‌‌டிப்பு மாதிரியே தோன்ற‌வில்லை!!ஆர்பாட்டம் இல்லாமல் இவ்வளவு அழகாக சினிமாவில் கதை சொல்ல முடியுமா........முடிந்திருக்கிறது சசியால் !காத‌ல் தோல்வியில் கூட‌ அந்த‌ மாரி ,அவ‌ன் மேல் வைத்த‌ பாச‌த்தைத்தான் பார்க்கிறாள் !
ப‌ட‌த்தின் முடிவில் ...............என் க‌ருத்து கொஞ்ச‌ம் வேறுப‌டுகிற‌து !கடைசியில் த‌ங்க‌ராசுவைப் பார்துவிட்டு வ‌ந்த‌ மாரி த‌ன் வீட்டில் உட்கார்ந்தோ அல்ல‌து ப‌னை ம‌ர‌த்த‌டியில் த‌னியாக‌ உட்கார்ந்தோ அழுவ‌து போல் முடித்திருந்திருக்க‌லாம் !அவள் க‌ண‌வ‌ன் முன்பு எதுவும் பேசாம‌ல் அழுகிறாள் என்னும் முடிவு கொஞ்ச‌ம் ............அந்த‌ப் பாத்திரத்தின் பெருமமையைக் குறைக்கிற‌து
க‌ண்மூடித்த‌ன‌மான காத‌ல் கொண்ட‌ ஒரு பெண் ,தான் கொண்ட‌ காத‌ல் நிறைவேறாம‌ல் போனால் கூட‌,
த‌ன் காத‌ல‌ன் ந‌ன்றாக‌ இருக்க‌ வேண்டும் என்று அவன் மேல் கொண்ட பாசத்தில் நினைக்கிறாள்,ம‌ன‌தாற‌ இன்னொரு திரும‌ண‌ம் செய்து கொள்கிறாள் ......இதெல்லாம் இய‌க்குன‌ரின் ஆக்க‌பூர்வ‌மான‌ சிந்த‌னைக‌ள் !இன்றைய‌ ச‌முதாய‌த்திற்கு தேவையான‌ சிந்த‌னைக‌ள் !
பொருப்பான‌ இய‌க்குன‌ர் ச‌சியை பார‌ட்டுகிறேன் !நேரில் ச‌ந்திக்க‌வும் ஆசைப்ப‌டுகிறேன் !!

Saturday, February 7, 2009

பெண்களும் கலைகளும்








பெண்களும் கலைகளும்
ம‌ன‌தின் வ‌டிகால்க‌ளாகத்தான் கலைக‌ளைப் பார்க்கின்ற‌ன‌ர் பெண்க‌ள் !ஆசைக்காக‌ கொஞ்ச‌ம்,திற‌மைக்காக‌க் கொஞ்ச‌ம்,அழகுக்காக‌க் கொஞ்ச‌ம்,ச‌ம்பாதிப்ப‌த‌ற்குக் கொஞ்ச‌ம்........என்று ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ க‌லைக‌ளைக் க‌ற்றுக் கொண்டாலும் , அதில் த‌ன்னை மற‌க்கிறார்க‌ள் என்ப‌துதான் உண்மை!
இப்ப‌டிப் ப‌ட்ட‌ க‌லைஞ‌ர்க‌ளைத் தேடிக் க‌ண்டுபிடித்து எங்க‌ள் மாத‌ இத‌ழிலும் தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளிலும் அறிமுக‌ப் ப‌டுத்துவ‌து எங்ங‌ள் முக்கிய‌ ப‌ணி !
திற‌மை உள்ள‌ ப‌ல‌ பெண்க‌ள் என்னைத் தேடி வ‌ருவ‌தும் ,அவ‌ர்க‌ள் க‌லைவ‌ண்ண‌ங்க‌ளைப் பெறுமையுட‌ன்காட்டுவ‌தும் உண்டு.
அப்ப‌டி இன்று என்னைப் பார்க்க‌ வந்தார் ச‌கோத‌ரி இந்திரா சேஷாத்ரி.
சென்னையில் வ‌சிக்கும் இவரின் ம‌துபானி ஓவிய‌ங்க‌ள் பிர‌மாத‌மாக‌ உள்ள‌ன‌.
உங்க‌ள் பார்வைக்கு சில‌வற்றைத் தந்துள்ளேன்
இந்திரா சேஷாத்ரியின் முகவரி
ph:99401 49930