Wednesday, March 18, 2009

லேனா வெளியிட்ட புத்தகம்




பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம்


லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் எழுதிய யோசிக்கலாம் வாங்க என்னும் புத்தகம்.


திரு.இல.கணேசன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில் மதி ஒளி சரஸ்வதியும் கலந்து கொண்டார்.




Wednesday, March 4, 2009

ஆஸ்கார் வெற்றி தரும் செய்தி!



நாம் ஒவ்வொருவரும் இந்தக் கணம் நினைத்துப் பூரிப்பு அடையும் செய்தி ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி !ரஹ்மானைப் பற்றி வரும் தகவலில் எல்லாம் கூடவே வருகிறது அவரது தாயாரைப் பற்றிய செய்திகளும் !இந்த உயரத்திற்கு மகனைக் கொண்டு வர எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார் அந்தத் தாய் !


தாயின் கனவை நனவாக்க எத்தனை உழைத்திருப்பான் இந்த மகன்!


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் அந்தத் தாயும்,என் தாயின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டும் என்று ஓடிய மகனும்தான்,இந்த ஆஸ்கார் வெற்றி நமக்குத் தரும் செய்தி!

Sunday, March 1, 2009

கணக்கு சரி விடை தப்பு !


வெகு ஆவலாக நான் கடவுள் திரைப்படம் பார்தேன். கணக்கெல்லாம் சரியாகப் போட்டு விட்டு கடைசி வரியில் விடையைத் தப்பாகப் போட்டவிட்ட மாணவனின் விடைத்தாளைப் பார்த்தாற் போல இருந்தது.

பிச்சைக்காரர்களின் பரிதாப உலகத்தை இதை விட அற்புதமாக யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இந்த பரிதாபத்திற்கு சாவுதான் முடிவு என்பது தப்பித்துக்கொள்ளலாக இருக்கிறதே !

இது என் கோணம் என்று பாலா சொல்லலாம் ! அப்படி அவர் சொன்னால் அவரை இயக்குனர் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் சாதாரண மனிதனுக்கே தான் வாழும் சமூகத்தைப் பற்றிய பொறுப்பு இருக்க வேண்டும் . திரைப்பட இயக்குனருக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு வேண்டாமா ?

சொல்லப் போனால் இந்தக் கதைக்கு தப்பான நீதி சொல்லும் ஆர்யா பாத்திரமே வேண்டாம் .

பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை , கொடுமையை ,நிஜம் போலக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பாலாவை ”ஹோ” என்று பாராட்ட வேண்டும். படம் முடிந்து எழுந்து போகும் போது “இந்தக் கொடுமை ஒழிய என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று நினைக்கக் கூடியவன் கூட அவர்களுக்கு சாவு தான் வரம் என்று நினைக்குமாறு முடித்துவிட்ட பாலா மேல் கோபம் தான் வருகிறது .