பிராமணர்களின் மேல் சமூகத்தின் பார்வை

சோவின் எங்கே பிராமணன் ஜெயா டிவியின் சமீபத்திய நல்வரவு .இன்றைய தேதியில் பிராமணர்களின் மேல் சமூகத்தின் பார்வை ,கேலி,துவேஷம்,வெறுப்பு இவைகளைப் பற்றியெல்லம் பேசுவதோடு பிராமணர்களின் அறியாமை,அலட்டல்,தவறுகள் இவற்றையும் அலசுகிறது இந்த தொடர்.பல இடங்களில் ,கேள்விகளை எழ வைத்து,அதற்கு சோ அவருக்கே உரிய பாணியில் ,தெளிவாக பதில் அளித்திருப்பது மிகவும் சிறப்பு .
பிராமணர்களே தங்கள் வழக்குப் பேச்சில் பேச வெட்கப்பட்டுக் கொண்டு ,எல்லாம் கலந்த ஒரு தங்கிலீஷில்,பேச ஆரம்பித்து விட்ட நேரத்தில் ...........
"அந்தந்த ஊர்க்காரர்கள் ,வேறு வேறு தமிழில் பேசும் பொழுது,பிராமணர்கள் அவர்களது தமிழில் பேசுவதை ஏன் கேலி செய்கிறீர்கள்" ..........என்னும் அவரது கேள்வி சர்வ நியாயமானதுதான்.

"உங்கள் பேச்சில் தெரியும் பிராமண பாஷையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்" என்று சிலர்.....அன்பு...(ஆத்திரக் )கட்டளையிட்ட போது என்னுடைய பதில் கூட இப்படித்தான் இருந்தது.நாம் நாமாக இருக்க ஏன் வெட்கப்பட வேண்டும் என்கிற என் தீர்மானம் தான் அதன் காரணம்.
பிராமணர்கள் தங்களுடைய பல பழக்க வழக்கங்களுக்கு ,நம்பிக்கைகளுக்கு சரியான காரணங்களைத்தெரிந்து வைத்துக் கொள்ளாததும்,மற்றவர்கள் அவர்களை கேலி செய்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
இந்தத் தொடரில் பிராமணர்களின் பல பழக்க வழக்கங்களுக்கு ,நம்பிக்கைகளுக்கு சரியான காரணங்களை விளக்கங்களை சோ கொடுக்க ஆரம்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

பிராமணர்கள் தங்களைத் தாங்களாக வெளிக்காட்டிக் கொள்ளும் தைரியம் பெற இந்தத் தொடர் வழி செய்யும் என்பதே என் நம்பிக்கை ,ஆவல்.