அமெரிக்காவின் Pittsburgh sri venkateswara
temple
அருமையாக உள்ளது . திருப்பதி போலவே சின்ன மலை மாதிரி உயர்த்திக்
கட்டின கோயில் .1975 ல் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் உதவி
மற்றும் மேற்ப்பார்வையில் கட்டிய கோயில் . பூஜை முறைகளில் இருந்து பெருமாள் உருவம்
வரை அத்தனையும் திருப்பதி போலவே . TTD தேவஸ்தானத்தில் உள்ள சூழலே அந்த அலுவலகத்திலும்
!. பெருமாள் படம் ,ஸ்லோக புத்தகங்கள் ,cd க்கள் போன்றவற்றிலிருந்து
உண்டியலில் போடும் உருவம் வரைக்கும் கிடைக்கிறது . அது மட்டும் இல்லை
.புளியோதரை,தயிர் சாதம் ,லட்டு (உதிர்த்தது ) எல்லாம் கிடைக்கிறது .
பெருமாள் தரிசனம் செய்து ,அர்ச்சனை ஆரத்தி "கோவிந்தா .....கோவிந்தா
" எல்லாம் முடித்து பிரகாரம் சுற்றி வந்தால் மகாலட்சுமிக்கு தனி சன்னதி . தனி
அர்ச்சனை .(அன்றைக்கு நான் கட்டிக் கொண்டு போன புடவை நான் தேடித் பார்த்து
வாங்கிக் கொண்ட இளம் ரோஜா நிறத்தில் வாடாமல்லி கலர் பார்டர் போட்ட பட்டுப் புடவை .அன்றைக்கு மகாலட்சுமிக்கு சார்த்தியிருந்த புடவையும் அதே நிறம்,அதே பார்டர் ,அதே
புடவை !! அட....!!!)
மனசு நிறைந்த தரிசனத்தோடு ,எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்திய முகங்களையும் பட்டுப் பாவாடை சட்டை குழந்தைகளையும் பார்த்த திருப்தியோடு திரும்பினேன்
.இன்றைக்கு பார்ப்பதற்கு "ஆஹா அமெரிக்காவில் திருப்பதியா
" என்று வியந்து தோன்றினாலும் ,35 வருடங்களுக்கு முன்னால் எப்படி யோசித்தார்கள்,பாடு
பட்டார்கள் ,கட்டி முடித்தார்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது .அந்த முன்னோடிகளை
வணங்கத் தோன்றுகிறது .